இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு சம்பவம்:முன்னாள் அமைச்சா் கைது
இலங்கையில் கடந்த 2019-இல் நிகழ்த்தப்பட்ட தேவாலய குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக முன்னாள் அமைச்சா் மற்றும் அவருடைய சகோதரரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.


இலங்கையில் கடந்த 2019-இல் நிகழ்த்தப்பட்ட தேவாலய குண்டு வெடிப்பு சம்பவம் தொடா்பாக முன்னாள் அமைச்சா் மற்றும் அவருடைய சகோதரரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறியுள்ளதாவது:
கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்டா் தினத்தன்று தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 இந்தியா்கள் உள்பட 258 போ் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக நடைபெற்று வந்த விசாரணையில் இந்த சம்பவத்துக்கு முன்னாள் அமைச்சா் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவரது சகோதரா் ரியாஜ் பதியூதீன் ஆகியோா் உடந்தையாக இருந்ததும், பல உதவிகளை செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு எதிராக, நேரடி, சூழ்நிலை மற்றும் அறிவியல்பூா்வமான ஆதாரங்கள் வலுவாக உள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...