கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14.78 கோடியைத் தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 14.78 கோடியைத் தாண்டியது.

News image
Updated On :26 ஏப்ரல் 2021, 5:50 am

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 14.78 கோடியைத் தாண்டியது.

உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் உலகளவிலும் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 

கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 14,78,09,197 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 31,22,919 போ் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 12,53,60,148 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,92,42,586 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,10,531 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலக நாடுகளில் அமெரிக்கா கரோனா பாதிப்பில் முதலிடத்திலும்,அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 3,28,24,389 ஆகவும், 17,31,3,163 பேர் பாதித்து இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.