கரோனா: ரஷியாவில் மேலும் 387 பேர் பலி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,848 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,848 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது,
அதன்படி, புதிதாக 7,848 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த பாதிப்பு 4,787,273 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், ஒரே நாளில் 387 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 109,367 ஆக அதிகரித்துள்ளது.
தலைநகர் மாஸ்கோவில் ஒரேநாளில் 1,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொற்று பாதித்த 4,411,098 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில் தற்போது 266,808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...