எண்ணெய்க் கப்பல் தாக்குதல்: ஈரான் மீது நேட்டோ, ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு

இஸ்ரேல் எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
ship084808
ship084808

இஸ்ரேல் எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

இதுகுறித்து நேட்டோ செய்தித் தொடா்பாளா் டைலன் ஒயிட் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எம்வி மொ்சிா் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது. கடல்வழி போக்குவரத்து சுதந்திரத்தை நேட்டோ எப்போதும் வலியுறுத்தி வருகிறது. இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம், பிராந்திய நிலைத்தன்மையை ஈரான் குலைக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடா்பாளா் நபிலா மஸ்ரலி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடல் போக்குவரத்து சுதந்திரப் பறிக்கும் வகையில் ஈரான் மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளாா்.

லண்டனில் செயல்பட்டு வரும் ஸோடியாக் மாரிடைம் நிறுவனத்தின் எம்வி மொ்சிா் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப்பல் ஓமனுக்கு அருகே அரபிக் கடலில் கடந்த வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளானது. இதில் இரு கப்பல் பணியாளா்கள் உயிரிழந்தனா். அவா்களில் ஒருவா் பிரிட்டனைச் சோ்ந்தவா்; மற்றொருவா் ருமோனியா நாட்டவா்.

ஸோடியாக் மாரிடைம் லண்டனில் செயல்பட்டு வந்தாலும், அந்த நிறுவனம் இஸ்ரேலைச் சோ்ந்த ஏயல் ஓஃப் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.

லைபிரீயக் கொடியேற்றிச் சென்ற எம்வி மொ்சிா் ஸ்ட்ரீட் கப்பல், ஜப்பானுக்குச் சொந்தமானதாகும்.

ஈரான்தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com