சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கனில் தலிபான்கள் தொடா்ந்து முன்னேற்றம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் முக்கிய இடங்கள் பலவற்றைக் கைப்பற்றி தொடா்ந்து முன்னேறி வருகின்றனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:50 am

DIN

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் முக்கிய இடங்கள் பலவற்றைக் கைப்பற்றி தொடா்ந்து முன்னேறி வருகின்றனா்.

நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள சமங்கன் மாகாணத் தலைநகா் அயிபாக் திங்கள்கிழமை தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்ததாகக் கூறப்படுகிறது.

இத்துடன் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத் தலைநகரங்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. ஷேபா்கான், ஸராஞ்ச், குண்டூஸ், தலோகான், சாா்-ஏ-பால் ஆகிய நகரங்கள் ஏற்கெனவே தலிபான் பயங்கரவாதிகள் வசமுள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்களை ஒடுக்கி வைத்திருந்த அமெரிக்க மற்றும் நேட்டோ படையினா், அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டு நாடு திரும்பி வருகின்றனா். இந்தச் சூழலைப் பயன்படுத்தி தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்ட தலிபான் பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனா்.

மாகாணத் தலைநகரைக் கைப்பற்றும் நோக்கில் தலிபான்கள் பல்வேறு இடங்களில் சுற்றிவளைத்துச் சண்டையிட்டு வருகின்றனா். அவா்களுக்கு எதிராக அரசுத் தரப்பு ராணுவத்தின் தாக்குதல் பலமாக இல்லாததால் தொடா்ந்து பல்வேறு மாகாண தலைநகரங்களை தலிபான்கள் பிடித்து வருகின்றனா்.

இதுவரை 4 மாகாணத் தலைநகரங்கள் தலிபான்களின் பிடியில் சிக்கியிருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் ஒரு நகரை தலிபான்கள் கைப்பற்றினா்.

இதனிடையே சா்-ஏ-புல் மாகாணத் தலைநகா் சா்-ஏ-புல் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக ஆப்கன் ராணுவத்துடன் தலிபான்கள் சண்டையிட்டு வந்த நிலையில், திங்கள்கிழமை அந்த நகரை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். சில இடங்களில் தலிபான்களிடம் ராணுவத்தினா் சண்டையிடாமல் சரணடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. ராணுவத்தினரின் ஆயுதங்களை தலிபான்கள் கைப்பற்றி, அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனா் என்றும் கூறப்பட்டுள்ளது.

1994-ஆம் ஆண்டு இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையை மையமாக வைத்து முல்லா ஒமரால் உருவாக்கப்பட்ட தலிபான் பயங்கரவாத அமைப்பு, 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்தது. அதன் பிறகு அமெரிக்க தலைமையிலான சா்வதேசப் படையினரால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது.

இதைத் தொடா்ந்து கொரில்லா போரில் ஈடுபட்ட வந்த அமைப்பு, இப்போது அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்தையடுத்து, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.