

இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலால் இதுவரை 21,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 1,860 ஆக இருந்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது.
மழைக்காலம் ஆரம்பித்திருப்பதால் கொசுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. நகரங்களை பாதித்த டெங்கு அடுத்ததாக கிராமப் புறங்களிலும் பரவும் அபாயம் இருக்கிறது என்பதால் அதிக உடல் வலி , காய்ச்சல், வாந்தி , மயக்கம் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.