இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் எனப் பெயர் மாற்றம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என தலிபான்கள் மாற்றியுள்ளனர்.
அதிபர் அலுவகத்தை கைப்பற்றிய தலிபான்கள்
அதிபர் அலுவகத்தை கைப்பற்றிய தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என தலிபான்கள் மாற்றியுள்ளனர்.
புகைப்படங்கள்: ஆப்கனில் நடப்பது என்ன? காபூல் நகர வீதிகளில்...
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என்ற பெயரில் தான் தலிபான்கள் ஆட்சி செய்து வந்தனர். செப்டம்பர் 2001இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்க படைகள் ஆட்சியை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் என பெயரை மாற்றியது.
இந்நிலையில், தலிபான்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி, ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படையினர் நாடு திரும்பி வரும் நிலையில், ஆப்கனை படிப்படியாக கைப்பற்றி வந்த தலிபான்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகரை கைப்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
ஆட்சியை கைப்பற்றி நான்காம் நாளான இன்று நாட்டின் பெயரை இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான் என பெயர் மாற்றப்பட்ட சின்னத்தை தலிபான் மூத்த தலைவர் ஜபியுல்லா முஜாஹித் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...