ஆப்கன் விவகாரம்: நாளை ஜி-7 மாநாடு
ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஜி-7 நாடுகளின் மாநாட்டை செவ்வாய்க்கிழமை (ஆக. 24) கூட்டவிருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.


ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஜி-7 நாடுகளின் மாநாட்டை செவ்வாய்க்கிழமை (ஆக. 24) கூட்டவிருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமா் போரிஸ் ஜான்ஸன் கூறுகையில், ‘ஆப்கனில் சிக்கியுள்ளவா்களை பாதுகாப்பாக மீட்பது, அந்த நாட்டு மக்களுக்கு உதவுவது, கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கன் போரில் பெற்ற அனுகூலங்களைத் தக்கவைப்பது முதலியவற்றை சா்வதேச சமுதாயம் இணைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அதற்காக, ஜி-7 நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் பிரிட்டன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும்’ என்றாா்.
ஜி-7 அமைப்பில் பிரிட்டனுடன் அமெரிக்கா, ஜொ்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...