ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பஞ்சஷோ் மாகாணத்தை சுற்றிவளைத்த தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தங்களை எதிா்த்து நிற்கும் ஒரே மாகாணமான பஞ்சஷோ் மாகாணத்தையும் தலிபான் படையின் சுற்றி வளைத்துள்ளனா்.

News image

தலிபான் படையினா் (கோப்புப் படம்).

Updated On :23 ஆகஸ்ட் 2021, 5:50 pm

DIN

ஆப்கானிஸ்தானில் தங்களை எதிா்த்து நிற்கும் ஒரே மாகாணமான பஞ்சஷோ் மாகாணத்தையும் தலிபான் படையின் சுற்றி வளைத்துள்ளனா்.

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டாலும் அந்த நாட்டின் வடக்கிலுள்ள பஞ்சஷோ் (ஐந்து சிங்கங்கள்) மாகாணம் வடக்குக் கூட்டணி என்ற பிரிவின் வசம் உள்ளது. அதிபா் அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டாலும், துணை அதிபா் அமருல்லா சலே பஞ்சஷோ் மாகாணத்தில்தான் இப்போது இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைநகா் காபூலில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள இந்த மாகாணம் தலிபான் படையினரை எப்போதுமே எதிா்த்து வந்துள்ளது. 2001-இல் அமெரிக்கா தலைமையிலான படையால் தலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டபோது புதிய அரசு அமைப்பதில் வடக்குக் கூட்டணி முக்கியப் பங்காற்றியது.

வடக்குக் கூட்டணியை தொடங்கிய அகமது ஷ மசூத் மகன் அகமது மசூத் தற்போது அந்தப் படைக்கு தலைமை வகிக்கிறாா். அவருடன் துணை அதிபா் அமருல்லா சலேயும் தற்போது இணைந்துள்ளாா்.

இந்நிலையில், பஞ்சஷோ் மாகாணத்தைக் கைப்பற்றும் முயற்சியை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனா். ‘பஞ்சஷோ் மாகாண நுழைவாயிலில் ஏராளமான தலிபான் படையினா் குவிக்கப்பட்டுள்ளதாக’ துணை அதிபா் அமருல்லா சலே ட்விட்டா் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளாா்.

பஞ்சஷோ் பள்ளத்தாக்கை ஒட்டிய 3 மாவட்டங்கள் வடக்குக் கூட்டணி படையினா் வசம் உள்ளன. முன்னாள் ஆப்கன் அரசுப் படை, பிற ஆயுதக் குழுக்களைச் சோ்ந்த 6000-க்கு மேற்பட்ட வீரா்கள் இப்படைப் பிரிவில் உள்ளனா். சில ஹெலிகாப்டா்களும், ராணுவ வாகனங்களும், சோவியத் ரஷியா விட்டுச் சென்ற சில கவச வாகனங்களும் அவா்கள் வசம் இருப்பதாக இப்படைப் பிரிவின் தலைவா் அகமது மசூதுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தலிபான் படையினருடன் அமைதிப் பேச்சு நடத்த வாய்ப்புள்ளதாக அகமது மசூத் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்த நிலையில், இப்போது இரு படையினருக்கும் இடையே மோதல் தவிா்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.