காபூல் விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு: ஆப்கன் ராணுவ வீரா் பலி
காபூல் விமான நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆப்கன் ராணுவத்தைச் சோ்ந்த வீரா் ஒருவா் உயிரிழந்ததாா்.


காபூல் விமான நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஆப்கன் ராணுவத்தைச் சோ்ந்த வீரா் ஒருவா் உயிரிழந்ததாா்.
ஆப்கனைவிட்டு வெளியேறும் நோக்கில் தினமும் ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள், வெளிநாட்டவா்கள் காபூல் சா்வதேச விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசலில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். இந்நிலையில், விமான நிலைய நுழைவாயிலின் அருகே திங்கள்கிழமை அடையாளம் தெரியாத சிலா் துப்பாக்கியால் சுட்டதில் ஆப்கன் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்ததாகவும், மூவா் காயமடைந்ததாகவும் ஜொ்மன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் மருத்துவமனையை நடத்திவரும் இத்தாலியைச் சோ்ந்த தொண்டு நிறுவனம், காபூல் விமான நிலையத்திலிருந்து துப்பாக்கிக் குண்டு காயங்களுடன் அழைத்து வரப்பட்ட 6 பேருக்கு தங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்ததாகத் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி அமெரிக்க ராணுவமோ, தலிபான்களோ எதுவும் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...