அழிவின் நாளை கண்முன் பார்த்தேன்...காபூல் விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தவரின் திக் திக் நிமிடங்கள்

ஆப்கானிஸ்தானில் மீட்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாயில்களை கடந்து விமானத்தில் சென்று விட வேண்டும் என நம்பிக்கையுடன் காத்தக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பேரில் அந்த முன்னாள் ஊழியரும் ஒருவர்
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம்
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம்

காபூல் நகருக்கு வன்முறையால் நிகழும் இறப்பு சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல. இருப்பினும், மீட்குப்பட்டுவிடுவோமோ என விமான நிலையத்திற்கு வெளியே காத்துக்கொண்டிருந்த மக்களுக்கு இரட்டை குண்டுவெடிப்பு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க சிறப்பு குடியேற்ற விசாவை பெற்றுதரும் சர்வதேச வளர்ச்சி குழுவின் முன்னாள் ஊழியருக்கு அந்நாள் வழக்கத்தை விட முன்பாகவே தொடங்கியது. மீட்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாயில்களை கடந்து விமானத்தில் சென்று விட வேண்டும் என நம்பிக்கையுடன் காத்தக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பேரில் அந்த முன்னாள் ஊழியரும் ஒருவர்.

அபே வாயில் அருகே 10 மணி நேரமாக அவர் வரிசையில் காத்துக்கொண்டிருந்தார். மாலை 5 மணி அளவில், ஒரு சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 

இதுகுறித்து அந்த முன்னாள் ஊழியர் கூறுகையில், "என் கால்களுக்கு அடியில் இருந்து யாரோ தரையை இழுத்தது போல் இருந்தது. ஒரு கணம் என் காதுகளில் குண்டு வெடித்ததாக நினைத்தேன், நான் கேட்கும் உணர்வை இழந்தேன்.

காற்றில் பறக்கும் சூறாவளியைப் போல உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் காற்றில் பறப்பதை நான் பார்த்தேன். உடல்கள், உடல் பாகங்கள், முதியவர்கள் மற்றும் காயமடைந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் குண்டு வெடித்த இடத்தில் சிதறிக் கிடப்பதை நான் பார்த்தேன். நம் வாழ்க்கையில் அழிவை பார்க்க முடியாது, ஆனால் இன்று நான் அழிவை பார்த்தேன், நான் அதை என் கண்களால் நேரில் பார்த்தேன்" என்றார்.

காபூல் நகரம் தலிபான்களின் ஆட்சியின் கீழ் வந்துள்ளது. மேற்கத்திய அரசுகள், தன்னார்வு அமைப்புகள் ஆகியவையுடன் இணைந்து பணியாற்றவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என அச்சம் கொள்ளப்படுகிறது. எனவே, தனது அடையாளங்களை வெளியில் கூற வேண்டாம் என அந்த முன்னாள் ஊழியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் ஆட்சியிலிருந்து தலிபான்கள் அகற்றப்பட்டதை தொடர்ந்து 20 ஆண்டுகளாக காபூலில் தொடர் தற்கொலை படை தாக்குதல்கள் தொடர் கதையாகிவிட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுப்பது, பலியானவர்கள், காயமடைந்தவர்கள் ஆகியோர் அங்கிருந்து அப்புறப்படுத்துவது என்பது ஆப்கானிஸ்தானில் வழக்கமான நிகழ்வாகிவிட்டது. 

இதுகுறித்து அந்த முன்னாள் ஊழியர் மேலும் கூறுகையில், "இந்த பிரச்னையை கையாளவோ, உடல்கள் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவோ அல்லது பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லவோ இன்று யாரும் இல்லை, இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் சாலையிலும் கழிவுநீர் கால்வாயிலும் கிடக்கின்றனர். அதில் பாயும் சிறிய நீர் கூட ரத்தமாக மாறியுள்ளது.

உடல் ரீதியாக நான் நலமாக இருக்கிறேன். ஆனால் இன்றைய குண்டுவெடிப்பால் நான் மனதால் காயப்பட்டுள்ளேன். இந்த அதிர்ச்சி என்னை ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ விடாது என்று நினைக்கிறேன்" என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com