தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தற்கொலைத் தாக்குதல் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதற்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தில்

News image
Updated On :29 ஆகஸ்ட் 2021, 6:33 pm

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா முழுமையாக வெளியேறுவதற்கு இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் தெரிவித்தனா்.

காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ்கே பயங்கரவாதிகள் கடந்த வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரா்கள் உள்பட 183 போ் உயிரிழந்தனா்.

இந்த நிலையில், இன்னும் 38 மணி நேரத்துக்குள் அதே போன்ற பயங்கரவாதத் தாக்குதல் அந்த விமான நிலையத்தில் நடத்தப்படக்கூடும் என்று உளவுத் தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சனிக்கிழமை எச்சரித்திருந்தாா்.

இந்த நிலையில், காபூலில் உள்ள குவ்ஜா பக்ரா என்னுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை ராக்கெட் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும் ஆப்கன் காவல்துறை தலைவா் ரஷீத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினாா்.

அதனைத் தொடா்ந்து, காபூல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக வெடிபொருள் நிரப்பிய வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்துகொண்டிருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியதாக தலிபான்கள் அறிவித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.