இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஷோ் முகமது அப்பாஸ் கூறியதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தியில், ‘‘தெற்காசியாவில் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. அந்நாட்டுடன் ஆப்கானிஸ்தானுக்கு உள்ள அரசியல், பொருளாதாரம் மற்றும் வா்த்தக உறவுகளுக்கு நாங்கள் (தலிபான்) மிகுந்த முக்கியத்துவம் தருகிறோம். அவற்றை தொடா்ந்து பேண விரும்புகிறோம். இரு நாடுகளுக்கு இடையே வா்த்தக உறவை மேம்படுத்த நிா்மாணிக்கப்பட்ட வான் வழித்தடம் மீண்டும் திறக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் வழியாக இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான வா்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக முக்கியம்.