ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல்: இடதுசாரி வேட்பாளர் வெற்றி

லத்தீன் அமெரிக்க நாடானா ஹோண்டுராஸ் அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி வேட்பாளர் சியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்றுள்ளார்.
சியோமாரா காஸ்ட்ரோ
சியோமாரா காஸ்ட்ரோ

லத்தீன் அமெரிக்க நாடானா ஹோண்டுராஸ் அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி வேட்பாளர் சியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்றுள்ளார்.

லத்தீன் அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தேசியக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நஸ்ரி அஸ்ஃபுராவும் அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான இடதுசாரி கட்சியின் சார்பில் சியோமாரா காஸ்ரோவும் போட்டியிட்டனர்.

இந்நிலையில் மொத்தம் பதிவான வாக்குகளில் சியோமாரா காஸ்ட்ரோ 53 சதவிகிதம் வாக்குகளையும், அஸ்ஃபுரா 34 சதவிகித வாக்குகளையும் பெற்றனர். இதன்மூலம் மீண்டும் ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டில் இடதுசாரி கட்சி ஆட்சியமைக்க உள்ளது.

சியோமாரா காஸ்ட்ரோவின் வெற்றிக்கு தேசிய கட்சியின் அதிபர் வேட்பாளர் நஸ்ரி அஸ்புரா வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன்மூலம் ஹோண்ட்டுராஸ் நாட்டின் முதல் பெண் அதிபர் எனும் பெருமையையும் சியோமாரா காஸ்ட்ரோ பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com