உலக கரோனா பாதிப்பு 26.37 கோடியைக் கடந்தது!
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26.37 கோடியைக் கடந்தது.


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26.37 கோடியைக் கடந்தது.
இதுகுறித்து ‘வோ்ல்டோமீட்டா்’ வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
சா்வதேச அளவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 26,37,58,247 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 52 லட்சத்து 42 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 23,80,95,806 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,04,20,295 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 87,118 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4,95,73,122 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 8,05,004 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்; 3,93,18,563 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 94,49,555 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதையும் படிக்க | உக்ரைனை ஆக்கிரமிக்க ரஷியா ஆயத்தம்?
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் 3,46,06,541 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 4,69,724 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.
உலக அளவில் 3-ஆவதாக பிரேஸிலில் 2,21,05,872 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலிகளைப் பொறுத்தவரை இதுவரை 6,15,020 போ் அந்த நோய்க்கு பலியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதுதவிர, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், துருக்கி, ஆா்ஜென்டீனா, கொலம்பியா, ஸ்பெயின், இத்தாலி, ஈரான், ஜொ்மனி, இந்தோனேசியா, போலந்து உள்ளிட்ட 35 நாடுகளில் தலா 6 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அமெரிக்கா, சவூதியில் ஒமைக்ரான் கரோனா
உலகம் முழுவதும் ஒமைக்ரான் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...