பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 73 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாள்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் டெங்குவால் 3 பேர் பலியாகியுள்ளதாகவும், 73 பேருக்கு புதிதாக டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. 

பஞ்சாபில் இந்த ஆண்டு மட்டும் டெங்கு காய்ச்சலால் 151 பேர் பலியாகியுள்ளனர் என்றும் மாகாணத்தில் மொத்தம் 25,605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பஞ்சாபின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. லாகூரில் 125 புதிய பாதிப்புகளுடன் நோயாளிகளின் எண்ணிக்கை 18,079 ஆக உயர்ந்துள்ளது என்று ஏஆர்ஒய் செய்தி தெரிவித்துள்ளது. 

புள்ளிவிவரங்களின்படி, தற்போது 150 நோயாளிகள் பஞ்சாப் முழுவதும் உள்ள வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com