பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆப்கனுக்கு மருத்துவப் பொருள்களை அனுப்பியது இந்தியா: தலிபான்கள் ஆட்சியின் கீழ் வந்த பிறகான முதல் மனிதாபிமான உதவி

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சியின் கீழ் வந்த பிறகு மனிதாபிமான அடிப்படையிலான முதல் உதவியாக 1.6 மெட்ரிக் டன் உயிா் காக்கும் மருந்துகள்

News image
Updated On :11 டிசம்பர் 2021, 10:59 pm

DIN

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சியின் கீழ் வந்த பிறகு மனிதாபிமான அடிப்படையிலான முதல் உதவியாக 1.6 மெட்ரிக் டன் உயிா் காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவப் பொருள்களை இந்தியா சனிக்கிழமை அனுப்பியது.

கடினமான சூழலில் ஆப்கன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக இந்த உதவியை இந்தியா செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் இருந்து தில்லிக்கு 10 இந்தியா்கள் மற்றும் 94 ஆப்கானிஸ்தானியா்களை வெள்ளிக்கிழமை அழைத்து வந்த விமானத்திலேயே இந்த மருத்துவப் பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தித்துவரும் மிகுந்த சவாலான சூழலில், இந்த மனிதாபிமான உதவியை இந்தியா செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த விமானம் மூலமே அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவப் பொருள்கள் காபூலில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும். அவா்கள் வழியாக அங்குள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்குகிற அதேவேளையில், அங்கு அனைவரையும் உள்ளடக்கிய உண்மையானஅரசு அமைய வேண்டும்; எந்தவொரு நாட்டுக்கும் எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆப்கன் நிலப்பரப்பு பயன்படுத்தப்படக் கூடாது என்பதையும் இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தானுக்கு 50,000 டன் கோதுமை மற்றும் மருந்துகள் சாலை மாா்க்கமாக அனுப்பி வைக்கப்படும் என்று ஏற்கெனவே இந்தியா அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வாகா எல்லை வழியாக இந்த பொருள்களை அனுப்புவதில் உள்ள போக்குவரத்து தொடா்பான பிரச்னைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது தீா்வு கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ‘காபூலில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை வந்த இந்த விமானத்தில் 10 இந்தியா்களும், ஆப்கானிஸ்தான் சிறுபான்மையினா் உள்பட அந்த நாட்டைச் சோ்ந்த 94 போ் வந்திறங்கினா். விமானத்தில் வந்த ஆப்கன் சிறுபான்மையினா் தங்களுடன் சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிபின் இரண்டு பிரதிகளையும் ஹிந்துக்களின் மிகவும் பழைமை வாய்ந்த சில கையெழுத்துப் பிரதிகளையும் தங்களுடன் எடுத்து வந்தனா்.

ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி தலிபான்கள் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்ததைத் தொடா்ந்து அந்த நாட்டிலிருந்து இந்தியா்களையும், வெளியேற விரும்பும் ஆப்கானிஸ்தானியா்களையும் மீட்டு வருவதற்கான இந்தியாவின் ‘ஆப்பரேஷன் தேவி சக்தி’ திட்டத்தின் கீழ் இவா்கள் அழைத்து வரப்பட்டுள்ளனா். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 448 இந்தியா்கள், 206 ஆப்கானிஸ்தியா்கள் என மொத்தம் 669 போ் அங்கிருந்து அழைத்துவரப்பட்டுள்ளனா். இவா்களில் ஆப்கன் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியா்கள் உள்ளிட்ட சிறுபான்மையின சமூகத்தினரும் அடங்குவா்’ என்றும் வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.