பிரிட்டனில் கரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை மீறினால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டின் சுகாதார செயலர் எச்சரித்துள்ளார்.
பிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரிட்டன் சுகாதார செயலர் மாட் ஹான்காக் எச்சரித்துள்ளார்.
கரோனா தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ள ஹான்காக் புதிய கட்டுப்பாடுகள் பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் சிவப்பு பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள 33 நாடுகளில் இருந்து வருவதை மறைக்கும் பயணிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்ற புதிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.
பிரிட்டனில் இதுவரை 39 லட்சத்து 72 ஆயிரத்து 148 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் சிலையுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்த தவெக வேட்பாளர்!
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
ரூ. 1,000 கோடி சொத்துள்ள தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


