சிறார் மரண தண்டனை: ஈரானைக் கண்டித்த ஐ.நா.
ஈரானில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு 17 வயதில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.


ஈரானில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு 17 வயதில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.
முகமது ஹசன் ரெஸாய் கடந்த 2007ஆம் ஆண்டில் கொலை குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 17 வயதில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் 30 வயதான ரெஸாய் 2020ஆம் ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதி கொலைக் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார். ஈரான் அரசின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் அவை தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ரெஸாய் கடுமையான சித்ரவதைகள் மூலம் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார் எனத் தெரிவித்த ஐ.நா. அவை, சிறாராக கைது செய்யப்பட்டவரை தூக்கு தண்டனைக்கு உட்படுத்தியது பன்னாட்டு மனித உரிமைக்கு எதிரானது எனக் குற்றம்சாட்டியுள்ளது.
2020ஆம் ஆண்டு மட்டும் சிறார் வயதில் கைது செய்யப்பட்ட 4 பேர் இதுவரை ஈரான் அரசால் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் 80 பேர் வரை ஈரானிய சிறைகளில் மரண தண்டனைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அவை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...