ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

ரஷியாவில் புதிதாக 27,039 பேருக்குத் தொற்று; மேலும் 536 பேர் பலி

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,039 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 536 பேர் உயிரிழந்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :1 ஜனவரி 2021, 9:56 am

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,039 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 536 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் புதிதாக 27,039 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 31,86,336 ஆக அதிகரித்துள்ளது. 

தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,907 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 536 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 57,555 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போதுவரை 25,80,138 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,48,643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலகளவில் கரோனா பாதிப்பில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.