பாகிஸ்தான்: விளையாடும்போது கையெறி குண்டு வெடித்து 2 சிறுவர்கள் பலி
பாகிஸ்தானில் விளையாடும்போது கையெறி குண்டு வெடித்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பெஷாவர்: பாகிஸ்தானில் விளையாடும்போது கையெறி குண்டு வெடித்ததில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய அப்பகுதி காவல்துறை அதிகாரி ரியாஸ் அகமது, பாகிஸ்தானின் வடகிழக்கு பெஷாவரில் சிறுவர்கள் விளையாடும்போது கையெறி குண்டுகளை கண்டறிந்துள்ளனர்.
அதனை வீட்டிற்கு எடுத்துச் சென்று விளையாடும்போது தவறுதலாக குண்டு வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
கைபர் கணவாய் மாகாணத்தின் தலைநகரான பெஷாவர் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியையொட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...