சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கரோனா பரவலில் இருந்து தப்பிக்க முழு விமானத்தையும் முன்பதிவு செய்த தம்பதி

கரோனா தொற்று பரவலில் இருந்து தப்பிப்பதற்காக இந்தோனேஷிய தம்பதி ஒரு விமானத்தின் அனைத்து இருக்கைகளையும் முன்பதிவு செய்து பயணித்த சம்பவம் நடந்துள்ளது.

News image

கரோனா பரவலில் இருந்து தப்பிக்க முழு விமானத்தையும் முன்பதிவு செய்த தம்பதி

Updated On :8 ஜனவரி 2021, 10:37 am

DIN

கரோனா தொற்று பரவலில் இருந்து தப்பிப்பதற்காக இந்தோனேஷிய தம்பதி ஒரு விமானத்தின் அனைத்து இருக்கைகளையும் முன்பதிவு செய்து பயணித்த சம்பவம் நடந்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் விமானப் பயணத்திற்கு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. முகக்கவசம் அணிவது, கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது என பயணத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரு தம்பதி முழு விமானத்தையும் முன்பதிவு செய்து பயணித்த வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் முல்ஜாடி. இவரும் இவரது மனைவி ஷால்வின் சாங்கும் இந்தோனேசியாவில் இருந்து பாலிக்கு விமானம் மூலம் செல்ல முடிவெடுத்தனர். ஆனால் தங்களது பயணத்தில் கரோனா தொற்று ஏற்படுமோ என அச்சம் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ரிச்சர்ட் முல்ஜாடி பாலிக்கு செல்லும் தனியார் விமானத்தின் அனைத்து இருக்கைகளையும் முன்பதிவு செய்து விமானத்தில் தங்களைத் வேறு யாரும் பயணிக்காததை உறுதிப்படுத்திக் கொண்டார்.

இந்திய மதிப்பில் ரூ.5.7 லட்சம் 12 வணிக வகுப்பு பயணி இருக்கைகள் மற்றும் 150 பொருளாதார வகுப்பினர் இருக்கைகள் ஆகியவற்றை முல்ஜாடி முன்பதிவு செய்துள்ளார்.

அதன்மூலம் தானும் தனது மனைவியும் விமானத்தில் பயணித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

அதில் அவர் ஆகியோர் கரோனா வைரஸால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்காக முழு விமானத்தையும் முன்பதிவு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா தொற்றைத் தடுப்பதற்காக முழுவிமானத்தையும் பதிவு செய்து பயணம் செய்த தம்பதியினரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.