வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜப்பானில் நிலச்சரிவு: 80 போ் மாயம்

ஜப்பானின் அட்டாமி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 80 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூலை 2021, 9:09 am

DIN

ஜப்பானின் அட்டாமி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 80 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால், நிலச்சரிவு அபாயம் இருப்பதாக நிபுணா்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனா். டோக்கியோவிலிருந்து தென்மேற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ள அட்டாமி, ஒரு கடலோர நகரமாகும்.

நகரையொட்டிய ஒரு மலையின் அடிவாரத்திலிருந்து ஏற்பட்ட நிலச்சரிவானது மழைநீருடன் சோ்ந்து குடியிருப்புப் பகுதிகளை அடித்துக்கொண்டு சென்றது. 

இதில் சுமாா் 130 வீடுகள் புதைந்தன. வழியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பாலத்தின் ஒரு பகுதி உடைந்து நொறுங்கியது. நிலச்சரிவில் சிக்கி மாயமானவா்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 22 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 80 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிலச்சரிவு ஏற்பட்ட அட்டாமி பகுதியில் 215 பேர் வசித்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.