தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இந்தியா என் மனதுக்குள் வேரூன்றி இருக்கிறது: சுந்தர் பிச்சை உருக்கம்

அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், என் மனதுக்குள் இந்தியா வேரூன்றி இருக்கிறது என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :13 ஜூலை 2021, 7:26 am

DIN

அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், என் மனதுக்குள் இந்தியா வேரூன்றி இருக்கிறது என கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமாக கூகுள் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், தான் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், தன் மனதுக்குள் இந்தியா வேரூன்றி இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அவர் அளித்த பேட்டியில், இணைய சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "செயற்கை நுண்ணறிவை மிகவும் ஆழமான தொழில்நுட்பமாக கருதுகிறேன். மனித இனம் அதை தொடர்ந்து மேம்படுத்தி அதில் பணி செய்யவுள்ளது. தீ, மின்சாரம், இணையம் போன்றவற்றை நினைத்தால் உங்களுக்கு என்ன தோன்றும்? அது போலத்தான். ஆனால், அதை விட இது ஆழமானது" என்றார்.

சீனாவில் இணைய பயன்பாடு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதே என்ற கேள்விக்கு, "சுதந்திரமான இணையம் என்பது தாக்குதலுக்காகி வருகிறது. எங்களுடைய எந்த சேவையும் சீனாவில் கிடைக்கப்படுவதில்லை" என பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.