2.5 பில்லியன் தடுப்பூசிகளை விற்க ஜான்சன் அண்ட் ஜான்சன் முனைப்பு

இந்தாண்டுக்குள் 2.5 பில்லியன் கரோனா தடுப்பூசிகள் விற்கப்படும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
vaccines085600
vaccines085600

இந்தாண்டுக்குள் 2.5 பில்லியன் கரோனா தடுப்பூசிகள் விற்கப்படும் என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி உற்பத்தி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஃபைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்களை காட்டிலும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி விற்பனையில் பின்தங்கியுள்ளது.

உற்பத்தி மற்றும் பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகளில் சிக்கி தவித்து வரும் ஜான்சன் அண்ட் ஜான்சன், இந்தாண்டுக்குள் 2.5 பில்லியன் கரோனா தடுப்பூசிகள் விற்கப்படும் என தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகுதான் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், மற்ற தடுப்பூசிகளை காட்டிலும் இதன் உற்பத்தி சற்று மந்தமாக இருந்தது.

இதனிடையே, இந்தாண்டுக்குள் 26 பில்லியன் தடுப்பூசிகள் விற்கப்படும் என ஃபைசர் நிறுவனமும் 19.2 பில்லியன் தடுப்பூசிகள் விற்கப்படும் என மாடர்னா நிறுவனம் அறிவித்திருந்தது. 

மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடுகையில் சென்று சேராத இடங்களில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளை கொண்டு சேர்க்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விநியோகத்தை மேற்கொள்ள தாமதமாகியுள்ளது. 

அதேபோல், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகளை எடுத்து கொண்டால் உயிரை அச்சுறுத்தம் ரத்த உறைதல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com