இந்தோனேசியாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை
இந்தோனேசியாவில் திங்கள்கிழமை கடலுக்கடியில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், பெரும் சேதம் எதுவும் உடனடியாக அறியப்படவில்லை; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.


பலு: இந்தோனேசியாவில் திங்கள்கிழமை கடலுக்கடியில் வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், பெரும் சேதம் எதுவும் உடனடியாக அறியப்படவில்லை; சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
மத்திய சுலவெசி மாகாணத்தைச் சோ்ந்த லுவுக் நகரிலிருந்து 98 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் 6.2 என்ற ரிக்டா் அளவில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
சுலவெசி மாகாணத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஆனால், சுனாமி அபாயம் எதுவும் இல்லை எனவும் இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிலநடுக்கம் ஏற்பட்டதும் மாகாண தலைநகா் பலுவில் ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்தனா். கடந்த ஜனவரியில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 105 போ் உயிரிழந்தனா் என்பது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...