இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு பிலிப்பின்ஸ் அரசு அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த வரிசையில் பிலிப்பின்ஸில் கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும்பணி கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிக்கு பிலிப்பின்ஸ் அரசு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்மூலம் கோவேக்சின் தடுப்பூசி பிலிப்பின்ஸ் நாட்டு மக்களுக்கு செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. முன்னதாக பிலிப்பின்ஸில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தயாராக இல்லாத பொதுமக்கள் கைது செய்யப்படுவர் என அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


