பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

உலகளவில் கரோனா பாதிப்பு 11.46 கோடியாக உயர்வு 

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.46 கோடியாக உயர்ந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது. 

News image

உலகளவில் கரோனா பாதிப்பு 11.46 கோடியாக உயர்வு

Updated On :1 மார்ச் 2021, 5:34 am

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.46 கோடியாக உயர்ந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11.46 கோடி பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 25,43,314 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,02,51,891 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,18,94,552 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 90,307 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,92,55,344 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5,25,776 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,11,12,241 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,57,195 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,05,51,259 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,55,018 பேர் பலியாகியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.