கரோனா: உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 9.14 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,14,69,174 ஆக உயர்ந்துள்ளது.


உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,14,69,174 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
வியாழக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11.57 கோடி பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 25,71,794 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சுமாா் 2,17,28,013 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 90,062 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,94,56,377 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 5,31,652 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,15,6,923 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,57,471 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,07,22,221 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,59,402 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...