210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு 

நியூசிலாந்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:40 pm

ANI

நியூசிலாந்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக  மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிஸ்போர்ன் நகரிலிருந்து வடகிழக்கில் 181 கிலோமீட்டர் தொலைவில் 9 கிலோமீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை. 

நியூசிலாந்தில் கடந்த வியாழக்கிழமை 8.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. வடக்கு தீவின் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சுனாமி அச்சுறுத்தல் காரணமாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.