உலகளவில் கரோனா பாதிப்பு 12.07 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,07,73,904 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கரோனா

தமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கரோனா
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,07,73,904 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி,
உலகம் முழுவதும் 12,07,73,904 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 26,72,204 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,74,18,471 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,06,83,229 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 88,160 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,01,38,586 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 5,48,013 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,15,25,477 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,79,602 பேர் பலியாகியுள்ளனர்.
தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,14,09,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,58,892 பேர் உயிரிழந்துள்ளனர் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...