இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றம்: வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி பெற்றது.
ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்
ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்
Updated on
1 min read

ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் வெற்றி பெற்றது.

இலங்கையின் போா்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சாா்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இலங்கை அரசுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரித்து பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளும், சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன. 

மேலும் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க பல்வேறு தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தநிலையில் வாக்கெடுப்பிலிருந்து இந்தியா புறக்கணித்தது. மேலும் 13 நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் புறக்கணித்தன. 

இதனால் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் ஐநா அவையின் மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com