தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நிக் பனிப்பாறை பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

News image
Updated On :29 மார்ச் 2021, 9:29 am

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நிக் பனிப்பாறை பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நிக்கிளேசியர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகவும், தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அலாஸ்கா மாகாண மீட்புக் குழுவினருக்குக் கிடைத்த தகவலின்படி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயத்துடன் ஏங்கரேஜ் பகுதி மருத்துவமனையில் மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.