சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தனிநபர் வருமானத்தில் இந்தியாவை முந்திய வங்கதேசம்

2020-21 ஆம் நிதியாண்டின் தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :21 மே 2021, 2:11 pm

DIN

2020-21 ஆம் நிதியாண்டின் தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது.

சுதந்திரம் பெற்ற பிறகு வறுமையில் தவித்து வந்த வங்கதேசம் தற்போது சீராக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்று மத்தியிலும் வங்கதேசத்தில் தனிநபர் வருமானம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் திட்ட அமைச்சர் எம்.ஏ.மன்னன் தெரிவித்தார்.

2020-21 ஆம் நிதியாண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 2,227 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2,064 ஆக இருந்தது. 

வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது 280 டாலர்கள் அதிகமாகும். இந்தியாவில் 2020-21ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் 1947 டாலர்களாக உள்ளது.

தற்போது வங்கதேசத்தின் தனிநபர் வளர்ச்சி விகிதம் 9% ஆக உயர்ந்துள்ள நிலையில் 2007 ஆம் ஆண்டில், வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.