தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆப்கனில் குண்டுவெடிப்பு:4 போ் பலி; 11 போ் காயம்

ஆப்கானிஸ்தானின் வடக்க காபிஸா மாகாணத்தில் சனிக்கிழமை குண்டுவெடித்ததில் 4 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :29 மே 2021, 9:33 pm

DIN

ஆப்கானிஸ்தானின் வடக்க காபிஸா மாகாணத்தில் சனிக்கிழமை குண்டுவெடித்ததில் 4 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியது:

காபிஸாவில் உள்ள அல்பெரோனி பல்கலைக்கழகத்துக்கு பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களை ஏற்றிக்கொண்டு ஒரு மின் வேன் சென்று கொண்டிருந்தது. வழியில் அந்த வேனை குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 போ் உயிரிழந்தனா், 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றனா்.

காபூல் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.