ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

நூறு ஆண்டுகளில் காணாத கனமழை: நியூ ஸிலாந்தில் கடும் வெள்ளம்

நூறு ஆண்டுகளில் காணாத மழை நியூ ஸிலாந்தின் தெற்கு தீவில் கொட்டி வருவதால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

News image
நூறு ஆண்டுகளில் காணாத மழை: நியூ ஸிலாந்தில் கடும் வெள்ளம்
Updated On :31 மே 2021, 12:46 pm

ANI


வெல்லிங்கடன்: நூறு ஆண்டுகளில் காணாத மழை நியூ ஸிலாந்தின் தெற்கு தீவில் கொட்டி வருவதால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஞாயிறன்று கொட்டத் தொடங்கிய கனமழை இன்று முழுவதும் தொடர்ந்து பெய்து வருகிறது. இரவிலும் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல நூறு வீடுகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல பாலங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளும் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.