முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நியூசிலாந்தில் கரோனா பரவல் அதிகரிப்பு

நியூசிலாந்தின் மக்கள் தொகை அதிகமுள்ள ஆக்லாந்தில் 200 பேருக்கு கரோனா பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து முதல்முறையாக நியூசிலாந்தில் 206 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடான நியூசிலாந்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் அந்நாடு பல சவால்களை சந்தித்துவருகிறது. இந்நிலையில், தொற்று அதிகரித்துள்ளது.

நியூசிலாந்தில் மக்கள் தொகை அதிகமுள்ள ஆக்லாந்தில் 200 பேருக்கு கரோனா பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா கரோனாவை எதிர்த்து நாடு போராடியதால் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அங்கு கடும் கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்துவருகிறது. இவை, திங்கள்கிழமை அன்று தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், "கிறிஸ்துமஸ் விழா காலத்தில், ஆக்லாந்து நகரவாசிகளை, ஆக்லாந்திலேயே தனிமைப்படுத்தி அடைத்து வைக்க மாட்டோம்" என்றார். 

தடுப்பூசியின் தேவை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், சனிக்கிழமையன்று கரோனா பரவல் அதிகரித்திருப்பது தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் மத்தியில் நினைவுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. 12 மற்றும் அதற்கு மேலான வயதுடையவர்களில் 78 சதவிகித்தினர் முழுவதுமாக தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர். 89 சதவிகிதத்தினர் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியுள்ளனர்.

கரோனா பரவலை தடுப்பதில், நியூசிலாந்து மேற்கொண்ட முயற்சிகளை பலரும் பாராட்டியிருந்த நிலையில், டெல்டா கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாடு திணறி வருகிறது. குறிப்பாக, பெருந்தொற்றுடன் வாழும் அந்நாட்டின் வியூகம் பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com