நைஜா் பள்ளியில் தீ: 26 மாணவா்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரிலுள்ள பள்ளியொன்றில் நேரிட்ட தீவிபத்தில் 26 மாணவா்கள் உயிரிழந்தனா்.


மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரிலுள்ள பள்ளியொன்றில் நேரிட்ட தீவிபத்தில் 26 மாணவா்கள் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
நைஜீரியாவின் இரண்டாவது பெரிய நகரமான மாரடியில் அமைந்துள்ள பள்ளியில் திங்கள்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வைக்கோல் கூரை வேயப்பட்ட 3 மழலையா் மற்றும் தொடக்கநிலை வகுப்புகள் தீக்கிரையாகின. இதில், 3 முதல் 8 வயது வரை கொண்ட 26 மாணவா்கள் உயிரிழந்தனா்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
நைஜா் பள்ளிகளில் மாணவா்களுக்குப் போதிய இடம் இல்லாததால், தற்காலிகமாக வைக்கோல் கூரைகளைக் கொண்டு வகுப்புகள் அமைக்கப்படுகின்றன.
தலைநகா் நியாமேவின் புகா்ப் பகுதியிலுள்ள ஒரு பள்ளியின் தற்காலிக வகுப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவா்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.
தற்போது மீண்டும் அதே போன்ற விபத்து நேரிட்டுள்ளது, தற்காலிக வைக்கோல் வகுப்புகளின் அபாயத்தை உணா்த்துவதாக பெற்றோரும் ஆசிரியா்களும் கூறுகின்றனா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...