1 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்த கமலா ஹாரிஸ்

அமெரிக்க அதிபர் பொறுப்பு தற்காலிகமாக கமலா ஹாரிஸூக்கு வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வமான கடிதம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு காலை 10:10க்கு அனுப்பப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு வழக்கமான கொலோனோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதிபருக்கான அதிகாரம் துணை அதிபர் கமலா ஹாரஸூக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டது என வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நேற்ற காலை, வாஷிங்டன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்திற்கு சென்ற பைடன், அதிபர் மேற்கொள்ளும் உடல் பரிசோதனையை முதன்முறையாக மேற்கொண்டார்.

கொலோனோஸ்கோபி சிகிச்சைக்கு மத்தியில் அவருக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டதால், அதிபருக்கான அதிகாரம் துணை அதிபர் கமலா ஹாரிஸூக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டது என ஊடக செயலாளர் ஜென் சாகி தெரிவித்தார். 

பின்னர், காலை 11:35 மணிக்கு, ஹாரிஸ் மற்றும் வெள்ளை மாளிகை தலைமை அலுவலர் ரான் க்ளெய்னிடம் பேசிவிட்டு, தனது பொறுப்புகளை மீண்டும் ஏற்று கொண்டார். 

முதல் பெண், முதல் கருப்பினத்தவர், தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்ட ஒருவர், தற்காலிக அமெரிக்க அதிபராக பொறுப்பு வகிப்பது இதுவே முதல்முறை. இதன் மூலம், கமலா ஹாரிஸ் வரலாறு படைத்துள்ளார். பைடன் மீண்டும் பொறுப்பை ஏற்று கொண்ட பிறகு, கமலா ஹாரிஸ் திட்டமிட்டபடி, ஓஹியோவுக்கு பயணம் மேற்கொண்டார்.

பைடனுக்கு கொலோனோஸ்கோபி சிகிச்சை அளிப்பதற்கு முன்பு இதுகுறித்து விளக்கிய ஊடக செயலாளர் ஜென் சாகி, "அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் 2002 மற்றும் 2007 இல் இதே நடைமுறையைப் பின்பற்றியபோது, ​​அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறையைப் பின்பற்றி, அதிபர் பைடன் மயக்க நிலையில் இருக்கும் குறுகிய காலத்திற்கு துணை அதிபருக்கு அதிகாரத்தை மாற்றுவார். இந்த நேரத்தில் துணைத் தலைவர் மேற்குப் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவார்" என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், பைடன் அதிபராவதற்கு முன்பு, அவருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் நல்ல உடல் நிலையுடன் வீரியமாக செயல்படுவதாகவும் அதிபர் பொறுப்பு ஏற்க முழு உடல் தகுதியுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்.

இன்றோடு 79 வயதாகும் பைடன், அதிபராக பணியாற்றும் மிக வயதான நபர் ஆவார். மேலும் அவர் 2019 இல் அதிபர் வேட்பாளராக அறிவித்ததிலிருந்து அவரது உடல்நிலையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், அதிபர் பைடன் மயக்க நிலையில் இருந்த 1 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு அதிபர் பொறுப்பை கமலா ஹாரிஸ் வகித்ததாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் பொறுப்பு தற்காலிகமாக கமலா ஹாரிஸூக்கு வழங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வமான கடிதம் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு காலை 10:10க்கு அனுப்பப்பட்டதாக வெள்ளை மாளிகை அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com