உலகில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் யார்? பகீர் தகவலை வெளியிட்ட மூத்த விஞ்ஞானி

வூஹான் விலங்குகள் சந்தையில் பணிபுரிந்த பெண்ணுக்குதான் உலகில் முதன்முதலாக கரோனா பாதிப்பு ஏற்பட்டது என வைராலஜிஸ்ட் மைக்கேல் வொரோபி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உலக சுகாதார அமைப்பு அறிவித்தது போல் சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஒருவருக்கு கரோனா பாதிப்பு முதலில் ஏற்படவில்லை என வைராலஜிஸ்ட் மைக்கேல் வொரோபி தெரிவித்துள்ளார். தற்போது, நம்பப்பட்டுவருவது போல் அல்லாமல் விலங்குகள் சந்தையில் உள்ள ஒருவருக்குதான் முதன் முதலில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வூஹான் நகரில் உள்ள விலங்குகள் விற்கப்படும் சந்தைக்கு செல்லாதவருக்குதான் முதன்முதலில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதாக நம்பப்பட்டுவருகிறது. இந்நிலையில், மைக்கேல் வொரோபி இதுகுறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அறிவியல் பத்திரிகை ஒன்றில் விரிவாக எழுதியுள்ள அவர், "வூஹான் நகரில் உள்ள விலங்குகள் சந்தைக்கு செல்லாத ஒரு ஆணுக்குதான் முதன்முதலில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், உலகில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் ஒரு பெண். அவர், விலங்குகள் சந்தையில் பணியாற்றிவர்" என்றார்.

கரோனா எங்கிருந்து பரவியது என்பது தொடர் மர்மமாகவே இருந்துவரும் நிலையில், மைக்கேல் வெளியிட்ட கருத்தின் மூலம் கரோனா விலங்குகளிலிருந்து பரவியது என்பது தெரியவருகிறது. இரண்டு ஆண்டு முன்பு, கரோனா பரவ தொடங்கியதிலிருந்து, எந்த ஒரு ஆதாரமும் இன்றி கரோனாவின் பிறப்பிடம் குறித்து நிபுணர்களிடையே தொடர் விவாதம் நடைபெற்றுவருகிறது.

இதனிடையே, மே மாதம் மத்தியில், அறிவியல் என்ற பத்திரிகையில் மைக்கேல் உள்பட 15 நிபுணர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கட்டுரையை வெளியிட்டனர். அதில், வூஹான் ஆய்வகம் ஒன்றிலிருந்துதான் கரோனா பரவியதாக வெளியான ஆய்வறிக்கையை தீவிரமாக கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது, வெளியான கட்டுரையில், விலங்குகள் சந்தையிலிருந்து பெருந்தொற்று பரவியதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக நிபுணர்கள் வாதம் முன்வைத்துள்ளனர். ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு, டிசம்பர் 30ஆம் தேதி, சந்தையிலிருந்து ஒரு சந்தேகத்திற்குரிய நோய் பரவிவருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்தது. 

இதன் காரணமாக, கரோனாவின் பிறப்பிடம் குறித்த ஆய்வின் பெரும்பாலான கவனம் சந்தையை நோக்கியே திருப்பிவிடப்பட்டதாக ஒரு சாரர் கூறுகின்றனர். வேறெங்கேனும் கரோனா பரவி இருக்க வாய்ப்பிருந்த போதிலும், எந்த எச்சரிக்கையின் மூலம் முழு கவனமும் சந்தையை நோக்கி திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த வாதத்திற்கு பதிலளித்துள்ள மைக்கேல், "எச்சரிக்கை விடுப்பதற்கு முன்பே இரண்டு மருத்துவமனைகளில் கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்" என்றார். அந்த கரோனா பாதிப்புகளுக்கும் விலங்குகள் சந்தைக்கும் தொடர்பு இருப்பதாகவும் மைக்கேல் விளக்கம் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com