
நார்வே நாட்டின் அமைச்சர் ஒருவர் பெயரில் இருந்த போலி கணக்கை சுட்டுரை நிறுவனம் உறுதி செய்துவிட்டதாகவும், ஆனால் அது சுட்டுரை நிறுவனத்தின் தவறல்ல என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
நார்வே நாட்டு புதிய நிதியமைச்சரின் பெயரில் இருந்த போலி சுட்டுரைக் கணக்குக்கு உறுதி செய்யப்பட்ட கணக்கு எங்க அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டது. இது சுட்டுரை நிறுவனத்தின் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இதையும் படிக்கலாமே.. வாகனங்களின் பிஎச் பதிவு: மாநிலங்களுக்கு மற்றொரு நிதி இழப்பு ஆபத்து?
ஆனால், அது சுட்டுரை நிறுவனத்தின் தவறல்ல என்றும், நார்வே நாட்டு பிரதமர் அலுவலகம் மற்றும் நார்வே பாதுகாப்புக் கழகம் தவறுதலாக, போலி கணக்கை சுட்டுரை நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நார்வே நிதியமைச்சர், சொந்தமாக எந்தவொரு சுட்டுரைக் கணக்கையும் வைத்திருக்கவேயில்லை என்பதுதான். அவரது பெயரில் ஏராளமான போலி சுட்டுரைக் கணக்குகள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் ஒன்றை, பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்புக் கழகம் இணைந்து சுட்டுரை நிறுவனத்தின் உறுதிப்படுத்தலுக்கு அனுப்பியிருந்ததே இந்த குளறுபடிகளுக்குக் காரணம் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.