ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உலகின் மிக உயர்ந்த பெண்!

உலகின் மிக உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்த ரமிசா கெல்கி (24) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

News image
உலகின் மிக உயர்ந்த பெண்!
Updated On :16 அக்டோபர் 2021, 10:54 am

DIN

உலகின் மிக உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்த ரமிசா கெல்கி (24) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலகளவில் பல சாதனைகளை  பதிவு செய்யும் கின்னஸ் புத்தகத்தில் இந்தாண்டுக்கான உயரமான பெண்ணாக துருக்கியைச் சேர்ந்த ரமிசா கெல்கி (24) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கெல்கி வீவர் சிண்ட்ரோம் என்கிற அரிய நோயால் பாதிக்கப்பட்டதால் அதன் பக்கவிளைவாக அதிகப்படியான வளர்ச்சியை அடைந்திருக்கிறார். இதனால் தற்போது இவர்  7 அடி, 0.7 இன்ச் உயரத்துடன்  இந்தாண்டிற்கான மிக உயரமான பெண் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். முன்னதாக இவரே 2014 ஆம் ஆண்டு உயரமான இளம்பெண் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார்.

இதுகுறித்து ரமிசா கெல்கி , ‘ நான் பிறந்ததிலிருந்தே உடல் சார்ந்து பிரச்னைகளுடனே வளர்ந்து வந்தேன். பின் ஸ்கோலியோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டதால் அதீத உயரத்தை அடையத் தொடங்கினேன். மேலும் நான் மாற்றுத்திறனாளி என்பதால் சக்கர நாற்காலியின் உதவியின்றி எங்கும் செல்லமுடியாது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.