அதிர்வலைகளை ஏற்படுத்தும் பருவ நிலை மாற்றம்; உலக தலைவர்கள் மீது எலிசபெத் ராணி அதிருப்தி
பருவ நிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் பேசுகிறார்களே தவிர போதுமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என இரண்டாம் எலிசபெத் ராணி அதிருப்தி தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஐநா பருவநிலை மாற்றம் மாநாட்டில் கலந்து கொள்ள மறுக்கும் தலைவர்களை விமரித்துள்ளார்.
வியாழக்கிழமை அன்று, கார்டிப்பில் வேல்ஸ் சட்டப்பேரவையை தொடங்கி வைத்தபோது ஒலிவாங்கியில் உலக தலைவர்கள் குறித்து அவர் தற்செயலாக பேசியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தை தலைமை ஏற்றி நடத்திய எலின் ஜோன்ஸுடன் பேசிய எலிசபெத் ராணி, "அசாதாரணமாக உள்ளது அல்லவா. ஐநா பருவநிலை மாற்றம் மாநாடு குறித்து அனைத்தையும் கேட்டிருக்கிறேன். ஆனால், அதற்கு யார் எல்லாம் வருகிறார்கள் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
யாரெல்லாம் வரவில்லை என்பது குறித்து அறிவேன். பருவநிலை மாற்றம் குறித்து பேசுகிறார்களே தவிர எதையும் செய்வதில்லை. உண்மையாக எரிச்சலாக இருக்கிறது" என்றார்.
கிளாஸ்கோ நகரில் இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ள ஐநா பருவநிலை மாற்ற மாநாடு, அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கவுள்ளது. பசுமை குடில் வாயுக்களை அதிகம் வெளியிடும் சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் இதில் கலந்து கொள்ளவுள்ளார்.
இதையும் படிக்க | மக்கள் குடியரசுத் தலைவர் கலாம்
பசுமை குடில் வாயுக்களை அதிகம் வெளியிடும் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. இதற்கு மத்தியில், பிரதமர் மோடி இதில் கலந்து கொள்வாரா என்பது குறித்து தெளிவுப்படுத்தவில்லை. பருவ நிலை மாற்றம் விவகாரத்தில் உலக தலைவர்கள் குறித்து எலிசபெத் ராணியின் மகன் இளவரசர் சார்லஸ், அவரது பேரன் இளவரசர் வில்லியம் ஆகியோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலரான சார்லஸ் பிபிசியில் திங்களன்று ஒளிபரப்பான பேட்டியில், உலகத் தலைவர்கள் களத்தில் இறங்கி நடவடிக்கைகள் எடுப்பதை விட்டுவிட்டு பேச மட்டுமே செய்கிறார்கள் என கவலை தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.