சீனாவில் குழந்தைகளை மனஅழுத்தத்திலிருந்து பாதுகாக்க வீட்டுப்பாடங்கள் மற்றும் சிறப்பு வகுப்புகள் உள்ளிட்ட நடைமுறைகளுக்கு தடை விதிக்கும் வகையிலான சட்டவரைவை அந்நாட்டு அரசு தயாரித்துள்ளது.
சீனாவில் சமீப காலமாக குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரையிலானோருக்கு மன ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகளை அந்நாட்டு அரசு தடை செய்து வருகிறது.
இதையும் படிக்க | டிரோன் தாக்குதலில் அல் கொய்தா முக்கியத் தலைவர் கொலை
சீனாவில் ஏற்கெனவே குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டுகளை வாரத்திற்கு 3 மணி நேரங்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய முயற்சியில் அந்நாடு இறங்கியுள்ளது.
அந்தவகையில் பள்ளிக்குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் வழங்குவது, சிறப்பு வகுப்புகள் நடத்துவது உள்ளிட்ட நடைமுறையைத் தடை செய்வதற்கான சட்டவரைவை சீனா தயாரித்துள்ளது.
மேலும் குழந்தைகள் இணையவெளியில் அதிகம் நேரம் செலவழிப்பதைத் தடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதிலும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | 3-ஆவது தவணைக்கு வேறு தடுப்பூசி: சிடிசி அனுமதி
சட்டவரைவு தயாரிப்புப் பணி முழுமையடைய உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


