
நைஜீரியா நாட்டின் சாம்பாரா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று (செப்-1) புதன்கிழமை துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் 73 மாணவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து காவல்துறை சார்பில் பேசிய முகமது சாஹு , 'மராதூன் பகுதியைச் சேர்ந்த கயா கிராமத்தில் அமைந்துள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபரால் அங்குள்ள 73 மாணவர்கள் கடத்தப்பட்டனர்.இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது' எனத் தெரிவித்தார்.
சமீப காலமாக முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நைஜீரியாவில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்களும் ஆள்கடத்தல்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.