25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர் நடத்திய கொடூர தாக்குதல்: நியூசிலாந்தில் பயங்கரம்

நியூசிலாந்து நியூலின் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மக்கள் ஷாப்பிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

News image
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்
Updated On :28 ஜனவரி 2024, 4:04 am

DIN

நியூசிலாந்து நியூலின் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர், அங்கிருந்த ஆறு பேரை சரமாரியாக குத்தினார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை சுட்டு வீழ்த்தினர். காவல்துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் அவர் இருந்துவந்தது தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், "கடந்த 2011ஆம் ஆண்டு, இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் நியூசிலாந்துக்கு வந்தார். பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் அவர் இருந்துள்ளார். ஆக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்ற அவர் அங்கிருந்து கத்தியை எடுத்து மக்களை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அவரை கண்காணித்துவந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில், ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளார். மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அருவருக்கத்தக்க, வெறுக்கத்தக்க, தவறான செயல் இன்று நடைபெற்றுள்ளது" என்றார். அந்த நபரின் நோக்கம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் ஊக்கம் பெற்ற இக்கொள்கை வன்முறையால் ஆனது" என பதில் அளித்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து, கண்காணிப்பு வளையத்திலிருந்து வரும் அந்த நபர் குறித்து கூடுதல் தகவல்களை பிகிர்ந்த கொள்ள ஜெசிந்தா மறுத்துவிட்டார். இந்த நபர் குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

நியூசிலாந்தில் வரலாறு காணாத பயங்கரவாத தாக்குதல் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. கிறிஸ்ட்சர்ச் மசூதியில் நடைபெற்ற அந்த தாக்குதலில் அப்பாவி இஸ்லாமியர்கள் 51 பேரை வெள்ளை நிற இனவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.