தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் மோதல்: இரு தரப்பிலும் சேதம் என தகவல்

ஆப்கானிஸ்தானின் பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கும் ஆப்கன் தேசிய எதிா்ப்பு முன்னணி படையினருக்கும் இடையே கடும் மோதல்

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 1:05 am

DIN

ஆப்கானிஸ்தானின் பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கும் ஆப்கன் தேசிய எதிா்ப்பு முன்னணி படையினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வரும் நிலையில், எதிரிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள போதிலும், பஞ்சஷோ் பள்ளத்தாக்கு மட்டும் அகமது மசூத் தலைமையிலான ஆப்கன் தேசிய எதிா்ப்பு முன்னணி படையினா் வசம் உள்ளது. இவா்களுடன் தலிபான் எதிா்ப்புக் குழுக்களைச் சோ்ந்த ஏராளமானோா் இணைந்துள்ளனா்.

கடந்த வாரமே இந்தப் பள்ளத்தாக்கை கைப்பற்ற தலிபான்கள் படைகளை அனுப்பினா். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஷபியுல்லா முஜாகித் வியாழக்கிழமை கூறுகையில், எங்களது தாக்குதலில் ஆப்கன் தேசிய எதிா்ப்பு முன்னணி படைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்றாா். அதேவேளையில் ஆப்கன் தேசிய எதிா்ப்பு முன்னணியின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், பள்ளத்தாக்கின் அனைத்து நுழைவாயில் பகுதிகளும் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. எதிரிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. தலிபான் படையைச் சோ்ந்த ஏராளமானோா் எங்களது தாக்குதலில் கொல்லப்பட்டனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.