வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இலங்கை : பொதுமுடக்கம் அக்.1 வரை நீட்டிப்பு

இலங்கையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்துள்ள பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் வரும் அக்-1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

News image
இலங்கை : பொதுமுடக்கம் அக்.1 வரை நீட்டிப்பு
Updated On :17 செப்டம்பர் 2021, 10:26 am

DIN

இலங்கையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்துள்ள பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் வரும் அக்-1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதிபா் கோத்தபய ராஜபட்ச தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினசரி பாதிப்புகள் 2,000-த்தைக் கடந்து வருவதால் மேற்கொண்டு தொற்று பரவாமல் இருக்க இந்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தாலும்  கட்டுப்பாடுகள் விரைவில் தளா்த்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கெஹேலியா ரம்புக்வெலா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

நேற்று(செப்-16) வியாழக்கிழமை நிலவரப்படி இலங்கையில் புதிதாக 2300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் ஒட்டுமொத்தமாக இதுவரை  4,98,694 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 11,187 போ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.