பிரதமர் மோடி குறித்து சித்திரிக்கப்பட்ட செய்தி: தி நியூயார்க் டைம்ஸ் இதழ் மறுப்பு

பிரதமர் மோடி குறித்து சித்திரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட செய்தியை பிரபல அமெரிக்க இதழான தி நியூயார்க் டைம்ஸ் மறுத்துள்ளது.
பிரதமர் மோடி குறித்து சித்திரிக்கப்பட்ட செய்தியை மறுத்த நியூயார்க் டைம்ஸ் இதழ்
பிரதமர் மோடி குறித்து சித்திரிக்கப்பட்ட செய்தியை மறுத்த நியூயார்க் டைம்ஸ் இதழ்
Published on
Updated on
1 min read

பிரதமர் மோடி குறித்து சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட செய்தியை பிரபல அமெரிக்க இதழான தி நியூயார்க் டைம்ஸ் மறுத்துள்ளது.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம், நாற்கரக் கூட்டமைப்பின் (க்வாட்) மாநாடு உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமா் மோடி அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். 

அதனைத் தொடர்ந்து உலகின் இறுதி மற்றும் கடைசி நம்பிக்கை எனத் தலைப்பிடப்பட்டு பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய செய்தியை தி நியூயார்க் டைம்ஸ் இதழ் வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் உலா வந்தது. 

பாஜகவினர் பெருவாரியாக பகிர்ந்த இந்த செய்தி வெளியான தினமே பலரும் இதன் உண்மைத் தன்மை குறித்து எழுத ஆரம்பித்தனர். செப்டம்பர் 26,2021 தேதியிட்டதாக பரப்பப்பட்ட புகைப்படத்தில் ஆங்கிலத்தில் ’September’ என்பதற்கு பதிலாக ’Setpember’ என பிழையாக இருந்ததை இணையவாசிகள் கண்டறிந்து சுட்டிக்காட்டினர். மேலும் அன்றைய தினம் வெளியான தி நியூயார்க் டைம்ஸ் இதழின் முகப்புப் பக்கத்தை பதிவிட்டு பொய்யாக வெளியிடப்பட்ட செய்திக்கு மறுப்பு தெரிவித்தனர்.

செப்டம்பர் 26ஆம் தேதி பிரதமர் மோடி குறித்து தி நியூயார்க் டைம்ஸ் இதழின் முகப்புப்பக்கத்தில் எந்தவிதமான செய்தியும் வெளியாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு விவாதமானது.

இறுதியாக இதுகுறித்து அறிந்த தி நியூயார்க் டைம்ஸ் இதழானது,  “இது முற்றிலும் புனையப்பட்ட செய்தி எனக் குறிப்பிட்டு போட்டோஷாப் செய்யப்பட்ட நியூயார்க் டைம்ஸ் பெயர் கொண்ட புகைப்படமானது அதிகமாக இணையத்தில் பரவி வருகிறது. இது உண்மையானது அல்ல” என மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் குறித்து சர்வதேச இதழின் முகப்புப் பக்கத்தில் வெளியானதாக பகிரப்பட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com