‘பிரதமர் மோடி நாட்டை துண்டாடுகிறார்’: ராகுல்காந்தி

பிரதமர் மோடி நாட்டைத் துண்டாடி வருவதாகவும் அதனை தடுக்க வேண்டியது நமது கடமை எனவும் கேரளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வயநாட்டில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
வயநாட்டில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

பிரதமர் மோடி நாட்டைத் துண்டாடி வருவதாகவும் அதனை தடுக்க வேண்டியது நமது கடமை எனவும் கேரளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ஒருநாள் பயணமாக கேரளம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி மலாபுரத்தில் ஹிமா டயாலிசிஸ் சென்டர் என்று மருத்துவமனையை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவினர் இந்தியாவை ஒரு நிலப்பரப்பாக மட்டுமே பார்க்கின்றனர். இந்தியா என்பது மக்கள், அவர்களுக்கிடையேயான அன்பு என நாம் சொல்கிறோம். இங்கு இந்துவிற்கும், இஸ்லாமியருக்கும், சீக்கியருக்கும், தமிழ், இந்தி, உருது, வங்க  உள்ளிட்ட இதர மொழி பேசுபவர்களுக்கும் இடையே நட்புறவு உள்ளது. பிரதமர் மோடி இந்த நட்புறவை துண்டாடி வருகிறார் என்பதே தற்போதைய பிரச்னை எனத் தெரிவித்தார்.

மேலும், “இந்த மக்களுக்கிடையேயான உறவை துண்டாடுவது இந்தியாவை துண்டாடுவதாகும். அதனால் தான் நான் அவரை எதிர்க்கிறேன். இந்தியாவின் வேறுபட்ட கலாச்சாரம், மதம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ளாமல் இந்தியர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது. இந்தியர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதே எனது பணி. அதுவே எனது கடமை” என தனது உரையில் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com